Thamil Heritage School of Waterloo Region and Guelph

Non-For-profit Organization – Registration # 1723469

Testimonials

2000 ம் அண்டு ஆரம்பிக்கப்பட்ட எம் பாடசாலைபற்றி எம்மவர்கள்...

பத்து வருடப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் நேரம் இது...!

 

டொராண்டோ மாநகரில் இருந்து குவல்வ் மாநகருக்கு இடம் மாறி வந்த நேரம். 

 

குழந்தைகளின் தமிழ் கல்வி பற்றி அக்கறை உள்ள பெற்றோர்களில் நாமும் உள்ளடக்கம். அவ்வகையில் ஒரு சிறிய தமிழ் மக்களைக் கொண்ட இம் மாநிலத்தில் முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கையில் கல்வித் திணைகளத்துடன் தொடர்பு கொண்ட போது, விக்டோரியா வீதியில் உள்ள St.Johns பாடசாலை தமிழ் வகுப்பிற்குரிய ஒழுங்கமைப்பை ஏற்படுத்தித் தந்தது.

 

அவ்வகையில் ஆரம்பித்த தமிழ் பாடசாலையில் தொடக்க ஆசிரியையாக திருமதி பத்மினி தொடக்கம் சியாமளா நவரத்தினம், தாரணி சிவகுமார், சாந்தி ராஜன், சியாமளா சுரேஷ், மற்றும் லட்ரிஷியா ஆகியோர் தமிழ் கல்வியை கற்பித்த ஆசானாக இருந்திருக்கின்றார்கள்.
 
குறிப்பாக சியாமளா நவரத்தினம் அவர்கள் வுழசழவெழவில் இருந்து குளிர் காலத்திலும் பல சிரமங்களின் மத்தியிலும் வந்து கற்பித்தது மிகவும் பாராட்டுக்கு உரியது.  மற்றும் பல தமிழ் ஊக்க வியலாளர்களால் பல வருடங்களுக்கு முன் சிறிதாக உருவான தமிழ் பாடசாலை, பல கிளை விட்டு இன்று மூன்று பெரும் பாடசாலையாக உருவானது மன நிறைவைத் தருகின்றது.


 

இன்றுவரை தமிழ் வளரப் பாடுபடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

 

வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்ப் பணி!!
நன்றி.

 

ராஜா சோமசுந்தரம் (நிர்வாக அங்கத்தவர்) 

& நந்தினி ராஜா(Guelph)

                                              

தமழே உயிரே வணக்கம்!!


நானும் எனது குடும்பமும் வேலை காரணமாக 2001 செப்டம்பர் மாதம் ரொரன்ரோவில் இருந்து குவல்ப் க்கு வந்தோம். ரோரன்ரோவில் எனது பிள்ளைகள் படித்த பாடசாலையில் தமிழ் வகுப்பு கிழமைக்கு ஒருதரம் நடைபெற்றுவந்தது. எனது பிள்ளைகள் சரளமாகத் தமிழ் பேசாவிட்டாலும் நாங்கள் கதைப்பதை விளங்கி எழுத வாசிக்கச் சிறிதளவு தெரிந்திருந்தார்கள்.


இங்கு வந்தவுடன் அவர்கள் தமிழை மறந்துவிடுவார்களோ என்று மிகவும் பயந்தோம். ஆனாலும் இங்கிருந்த தமிழர்களின் முயற்ச்சியினால் எங்களுக்கு மிக அருகாமையில் இருந்த பாடசாலையில் தமிழ் வகுப்பு International Language Program (ILP) ஊடாக நடைபெறுவதை அறிந்து மகிழ்ந்தோம். எனது பிள்ளைகளும் அங்கு தமிழ் படிக்கத் தொடங்கினார்கள்.


நாளடைவில் மாணவர் பற்றாக்குறை காரணமாக தமிழ் வகுப்பு நின்றுபோகும் சாத்தியக்கூறுகள் தென்பட்டன. இதையறிந்த திரு. குணா குணசேகரன் (Waterloo), திரு. புனிததாஸ் பியசேன (Guelph),  திரு. புவனேந்திரராஜா சோமசுந்தரம் (Guelph) ஆகியோரும் இதர தமிழில் ஈடுபாடுள்ள  அன்பர்களும்  மிகவும்  முயற்ச்சி  செய்து  2006ம்  ஆண்டு  Guelph இலுள்ள   Centennial பாடசாலையில் வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி தொடக்கம் 8:00 மணி வரை தமிழ் வகுப்புக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.


இவ்வகுப்பை நடாத்துவதற்குப் பணப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக ஆண்டுதோறும் கோடை காலத்தில் “நகைச்சுவை மாலை” எனும் நிகழ்ச்சி Waterloo, Guelph, Kitchener,Cambridge நகரங்களிலுள்ள தமிழ் அன்பர்களின் முயற்ச்சியாலும் உள்ளு+ர்க் கலைஞர்களின் ஆதரவினாலும் மிக வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்தத் தமிழ் வகுப்புக்களால் எனது பிள்ளைகளும் இதர தமிழ் பேசும் அன்பர்களின் பிள்ளைகளும் தமிழைக் கற்பதுடன் பெரிவர்களுடன் சிறிது நேரம் உரையாடவும் வாய்ப்புள்ளது. இனிவரும் காலங்களில் இளைய சந்ததியினரும் இம்முயற்ச்சியில் பொறுப்பேற்று வெற்றிகரமாக முன்னெடுத்து நடாத்த வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 


தமிழை மறப்பது உங்கள் தாய் தந்தையரை மறப்பதற்குச் சமமாகும்.


சிவேந்திரன் (Guelph)

 (நிர்வாக அங்கத்தவர்)

                       

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்றும் மங்காத தமிழுக்கே!!!

 

எங்கள் குழந்தைகள் புலம்பெயர் நாடுகளில் எங்கள் தாய்மொழியாம் தமிழ் மொழி பேசவும் எழுதவும் வாசிக்கவும், இவை எல்லாவற்றிக்கும் மேலாகத் தமிழ்க் கலைகளில் பங்கேற்கவும் உதவுவது தமிழ் பாடசாலைகள்தான் என்றால் மிகையாகாது. அத்தகைய ஒரு புனிதமான, உன்னதமான முன்னெடுப்பைத்தான் எமது தமிழ்ப் பாடசாலையான “வோட்டர்லூ குவல்ப் வட்டாரத் தமிழ்க் கலாச்சாரப் பாடசாலை”யும் தனது பங்களிப்பாகக் கடந்த பத்து வருடங்களாகச் செய்து வருகின்றது எனச் சொல்வதில் நான் பெருமிதம் அடைகின்றேன்.

 

எங்கள் பாடசாலை பலவிதமான தடைகளையும் தாண்டித் தனது பத்தாவது ஆண்டினை நிறைவு செய்து வெற்றிநடை போடும் இவ்வேளையில், எங்கள் பிள்ளைகளின் தமிழ் ஆர்வம் கண்டு நானும் இப்பாடசாலையில்  ஒரு ஆசிரியை என்ற முறையில் பூரிப்படைகின்றேன். எங்களிற்கு ஏன் தமிழ் மொழி தெரிய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய பல மாணவர்கள் இன்று, நீங்கள் முழுக்க முழுக்கத் தமிழிலேயே எங்களுடன் பேசுங்கள் என்று சொல்லும் அளவிற்கு எங்கள் பிள்ளைகளுக்குத்  தமிழ் மேல் உள்ள ஆர்வத்தை வளர்த்ததும் எங்கள் பாடசாலைதான் என்று சொல்வதில் பெருமை அடைகின்றோம்.  இப்பாடசாலை இன்னும் பற்பல சாதனைகள் புரிந்து மென்மேலும் மேன்மைபெற எனது வாழ்த்துக்கள்.

 

வாழ்க தமிழ்!!


சந்திரா குணசேகரன்

தமிழ் ஆசிரியை - வாட்டர்லூ

                             

அன்னைத் தமிழே உனை என்றும் மறவோம்….


நம் சுந்தரத் தமிழை நம் குழந்தைகளுக்கும் புகட்ட வேண்டும் என்ற ஆர்வத்தோடு தமிழ் உணர்வெனும் தண்ணீர் ஊற்றிஇ தங்கள் உழைப்பை உரமாக்கிப் பாடுபட்ட எம் தமிழ்ச் சகோதரர்களுக்கு என் முதல் வணக்கம்.

 

அதே ஆர்வத்தோடு தமிழ்ப் பாடசாலைகளுக்குச் செல்லும் எம் குழந்தைகளுக்கும் என் நன்றி. சிறு துளி பெரு வெள்ளம் என்பது போன்று இந்தப் பத்து ஆண்டுகளில் ஒரு கிளையாகத் தொடங்கி இன்று மூன்று கிளைகளாகத் துளிர்விட்டு வளர்ந்துள்ளோம். இது நமக்கு மாபெரும் ஒரு வெற்றி.

 

இந்தப் பத்து ஆண்டுகளையும் அசைபோட்டுப் பார்க்கும்பொழுது நாம் சந்தித்தவைகளின் பட்டியல் எண்ணிலடங்கா.
 
ஒரு ஆண்டு (2003) எனக்கும் எம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வாய்ப்பளித்ததற்கு என் நன்றி.


“என் அன்னைத் தமிழே உனை என்றும் மறவோம்”


                                  

நன்றி
       

ஷாமிலா சுரேஸ்குமார்.
                                                                                       

(தமிழ் ஆசிரியை - Guelph)

                     

புண்ணியம் கோடி – எழுத்தறிவித்தல்..


 
 "புண்ணியம்  எது?" என மகாகவி பாரதியாரை கேட்டால் அவர் சொல்லுவார்,

 

"அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்“
என்று.

தமிழ் கலாச்சாரமும், மொழி வழிதலும் ஏழ்மை நிலையை கொண்ட இவ்விடத்தில் ஒரு தமிழ் கலாச்சாரப் பாடசாலையை ஆரம்பித்து வைத்தது 'கோடி புண்ணியம்' செய்ததுக்குச் சமமான நிகழ்வு என்பது மறுக்க முடியாத ஒன்று. தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பர், கண்தானம் என்பர், இரத்ததானம் என்பர்....


 அன்னதானம் அன்றைய அரை சான் வயிற்றை காப்பாற்றும், கண்தானம் இன்னும் சொற்ப காலத்திற்கு வெளிச்சத்திற்கு மட்டும் கைகொடுக்கும், இரத்ததானம் அடுத்த பாசக்கயிறு வரும்வரை கொண்டிழுக்கும்,  ஆனால்..


 கல்வித்தானம் என்பது அவனது சந்ததிக்கும், சமுகத்திற்கும், நாட்டுக்கும் ஏன் உலகிற்கும் கைகொடுக்கும். அப்படியான ஒரு உன்னதமான தானத்தை இந்த தமிழ்க்கலாச்சாரப் பாடசாலை எம் அடுத்த தலைமுறைக்காக எம் சமுகத்தில் விதைத்திருக்கின்றது. விளைவிற்காக நீர் ஊற்றிக்கொண்டும் இருக்கின்றது.


 தமிழ் வளம் அற்ற இடத்தில் விதையூண்டி, விருச்சமாக வளரவேண்டும் என்ற தமிழ் பற்றாளர்களின் அயராத முயற்சியினால் இன்று 10வது வருடத்தை வருடிக்கொண்டிருக்கும் தமிழ் கலாச்சாரப்பாடசாலை மென்மேலும் வளர்ந்து, எம் சமுகத்திற்கு இன்னது செய்யவேண்டுமென வாழ்த்துகின்றேன்!

 

 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!


அன்புடன்
யோ. பார்த்திபன்

(நிர்வாக அங்கத்தவர் - Guelph) 


                                                     


“தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
              தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”


இத்தகைய பெருமைக்குரிய மொழிதான் எம் தாய்மொழியாம் தமிழ் மொழி. புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது பிள்ளைகள்; தமிழைக் கற்க வேண்டும் என்பதற்காகவும், எமது கலாச்சாரம், பண்பாடுகளை வருங்கால சந்ததியினரும் அறிந்து, அவற்றை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கிலும் உருவானதுதான் வோட்டலூ குவல்ப் வட்டாரத்; தமிழ்க் கலாச்சார பாடசாலை. மொழிப்பற்றும் சமூக அக்கறையும் கொண்ட ஒரு சிலரி;ன் முயற்சியில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்களைக் கடந்து நிற்பது எம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விடயமாகும.;

 

இங்குள்ள பாடசாலைகளை நடத்துவதோடு மட்டுமல்லாது தாய்நாட்டில் வாழும் எம் சிறார்களின் கல்விக்கும் இங்கிருந்து உதவி வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா, வருடாவருடம் நடாத்தப்படும் எமது சமூகத்தின் ஒன்றுகூடல் வைபவங்கள், பொங்கல், நத்தார் பண்டிகைகள்; மூலம் மாணவர்களிடம் உள்ள திறமைகளை ஊக்குவிப்பதிலும், எமது சமூக உறவை வளர்ப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றது.

 

இச்சேவைகள் மென்மேலும் வளர நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதோடு, எமக்கு அடுத்து எமது பிள்ளைகளும் இப்பொறுப்புகளை ஏற்று. எமது மொழி, கலாச்சாரம், பண்பாடுகளை பேணவேண்டுமெனில்  அவர்களை மொழிப்பற்;றும்  எம் உறவுகளின் மேல் அக்கறையும் உள்ளவர்களாக வளர்ப்பதில் பெற்றோர்களாகிய எமக்கு பெரும் பங்குண்டு.

 

குவல்ப் தமிழ்ச்சமூகத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்ற வகையில், தமிழ்க் கலாச்சார பாடசாலையின் இந்த சேவையானது, மேலும் மேலும் வளர்ந்து, இன்னும் பல ஆண்டு நிறைவு விழாக்களைக் காண வாழ்த்துக் கூறி விடைபெறுகிறேன்.

 

     எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே!!!


லெற்றிசியா கெனத்
(தமிழ் ஆசிரியை - Guelph)

                                                      

 

எமது தமிழ் மொழியை இந்தத் தமிழ்ப்பாடசாலையில் கற்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

விகாசினி குகநேசன் (Student –Guelph)

                                                     

 

நீண்ட காலத்தின் பின்னர் எமது தாய்மொழியைக் கற்பதில் எனக்கு சந்தோசம். எமது மொழி எம்முடன் என்றும் வாழ வேண்டுமென ஆசைப்படுகின்றேன்.

கோகுல்நாத் குகநேசன் (Student –Guelph)

                                                      

 

 

எமது தமிழ்ப் பாடசாலையால் எனது தமிழ் முன்னேறிவிட்டது.

டிலக்சன் புஸ்பராஜன் (Student –Guelph)

         

 

                                            

I learned a lot of  thamil words that I didn’t know. Now I can talk thamil to my family members.

Geeth  Kenneth (Student –Guelph)

 

 

                                                     

I didn’t know any thamil before, but when I went to thamil class I learned a lot of thamil words and I learned quickly.

Edmond  Kenneth (Student –Guelph)

 

 

                                                      

The founders of Thamil Heritage School try their best to give us the best Thamil Language education.
Sangave Gunajothy (Student – Watertloo)

 

 

                                                    

Our Thamil School Field trips were awesome and so much fun when we went to Niagara Falls, Cherry pick-up and played Cricket
Lakshan  Gunajothy (Student- Waterl
oo)

                                                    

எம் தாய்மொழி தமிழ்!
 
தமிழைக் கற்றதில் நிச்சயம் எனக்குப் பெருமையே!

தமிழ் பேசத் தெரியாத தமிழ் மாணவர்க்கு முன், நான் என் அம்மா அப்பாவுடன் தமிழில் உரையாடும் போது அவர்கள் " ஓ,  உமக்குத் தமிழ் தெரிமா?"  என்று கேட்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும்.

தமிழின் அருமை இப்போதுதான் தெரிகிறது. தமிழ் மொழி கற்பது, தமிழில் பேசுவது நிச்சயம் தமிழனுக்குப் பெருமையே!
 
கற்போம் தமிழை!
கதைப்போம் இனிதாய்..!!
 
நன்றி
கபிலன் புவனேந்திரராஜா
(University of Guelph)

 

 

 


"தமிழுக்கும் அமுதென்று பெயர் - அந்த
தமிழ் எந்தன் உயிருக்கு மேல்...!"

 
நான் தமிழ் கற்றதையிட்டு மிகவும் பெருமையடைகிறேன். இப் பெருமைக்கெல்லாம் காரணம் எனது பெற்றோரே.
 
இன்று நான் பகுதி நேர வேலை புரியும் 'Holiday Inn' அதிகாரி இந்திய கேரளா நாட்டைச் சேர்ந்தவர் . அவருடன் தமிழில் கதைக்கும் பொது மிகவும் பெருமையாக இருக்கும். தமிழில் திரைப்படங்கள் பார்ப்பதுவும், கலக்கப்போவது யாரு போன்ற நகைச்சுவை  நிகழ்ச்சிகளை ரசிப்பதும் என்னைப்போன்ற தமிழ்  தெரிந்தவர்களுக்கு மட்டும் கிடைக்கும் பாக்கியம்!
 
தமிழைக் கற்போம்!
பெருமை கொள்வோம்!!
நிருஷன் புவனேந்திரராஜா
வகுப்பு 12
Centannial High School, Guelp
h

 

 

 


எனது அனுபவம் - My experience


நான் தமிழ்ப் பாடசாலையில் தொடக்கத்திலிருந்து படிக்கின்றேன். எனது சொந்த அனுபவத்தில் தமிழ்ப் பாடசாலை எனக்கு மிகவும் கற்றுக்கொடுத்துள்ளது. படிப்புடன் சேர்ந்து விழையாட்டும் நிறைந்ததனால் மகிழ்ச்சியுடன் படித்தேன். இப்பொழுது எனக்கு எனது தாய் மொழியில் எழுத வாசிக்க கதைக்கத் தெரியும் எனச் சொல்லும்போது பெருமை அடைகின்றேன்.


எனது கட்டுரையை இனி ஆங்கிலத்தில் எழுதுகிறேன் ஏனென்றால்  இப்போது தமிழ் கற்கத்  தொடங்கியிருக்கின்ற பிள்ளைகளுக்கும் எப்படி இந்தப் பாடசாலை எனக்கு உதவியிருக்கின்றது என  விளங்குவதற்காக.

 

My experience as a student in Thamil School took place over 10 years and this has allowed me to gain a good perspective of how it truly benefits the students. The academic progression of Thamil upon each student was easily noticeable due to the great learning environment and teachers. But beyond the academic experience, I have built many friendships and memories throughout the years. Amongst the students, we all became friends so quickly in class because we all shared the same nationality and language, which made it different than the friendships that we share at school. And I had so much fun amongst other Thamil peers because we shared so many jokes and conversations that couldn’t be possible with our friends at school. Through the field trips, fun competitions, shows, and academics, this has been such an unforgettable ride.

 

Spending 2 hours of each week since I can remember in Thamil class has allowed me to stay connected to my culture and background, and has helped me learn so much more of the Thamil language. It has also let me witness the growth of the school since it began. When it began, I remember waking up early on Saturdays to drive to Guelph for Thamil School where we learned in an environment full of many other language classes, and we had regular assemblies and such like my elementary school. It started off with a very big class, but soon after it became self funded, the class was noticeably less populated. And there were many distinct phases that I can remember when the numbers fluctuated, but the school kept enduring through it all and didn’t stop even when there were only 3 kids, and I hope for it to continue and keep the language and culture alive.


I can also proudly say that I have participated in many TV dramas and poem readings and debates throughout the years that I have been a student. These opportunities have not only built more fun memories, but have also made me so proud of the skills that I have gained from Thamil School. After performing and watching each program, when I get compliments about my performance it makes it all worth it and I can thank Thamil School for a lifetime for giving me the chance to learn my native language.


Concluding, I hope that 10 years is just a beginning step for this school and Thamil is kept alive for many more generations to come, because soon it’ll be my generation that will have the responsibility. I hope that all the students of Thamil School will keep the culture and language alive even after graduating from the school itself, and ultimately pass it on to their children. This journey for Thamil School has taken place on a rocky road but it had been a very memorable ride. And, I am deeply grateful to have had the privilege of taking part and keeping my culture alive.


நன்றி வணக்கம்
                             
சாருமதி குணசேகரன்
(Student Waterlo
o)

எனது தாய் மொழி…

தமிழ் வகுப்பிற்குப் போவதால் எனக்குத் தமிழ் எழுத வாசிக்கத் தெரியும்.
இப்போது எனக்குத் தமிழ் கதைக்கத் தெரியும்.

 

எனது தாய் மொழி தெரியும் என்பதில் பெருமையாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்துக்கு நன்றி.

 

தக்ஷி சிவேந்திரன்
      (தமிழ் மாணவி -(Guelph )

 
“ஏகும் தேசம் எதுவானாலும் - நீ
 வாழும் வரையில் தமிழ் பேசு!”

 

காலத்தின் கட்டாயத்தால் புலம் பெயர்ந்து வந்த எம் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இன்று கனடாவிலேயே வாழ்கின்றனர். இவ்வாறு நாம் புலம் பெயர்ந்துள்ள நாடுகளில் எமது தாய்மொழியான தலை சிறந்த தமிழ் மொழியைப் பேணி வளர்ப்பது நம் எல்லோரதும் கடமையாக இருக்கின்றது.

 

எமது சமூகத்தில் கிடைப்பதற்கரிய தமது பொன்னான நேரத்தையும் பொருட்படுத்தாது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக சிறந்த முறையில் தமிழ் வகுப்புக்களையும் சமூக வைபவங்களையும் நடாத்துவதில் மிகவும் ஆர்வமுள்ளவர்கள் இருப்பதை எண்ணி நாம் எல்லோரும் பெருமை அடையவேண்டும்.

 

குவல்ப் தமிழ்ப் பாடசாலையில் நானும் ஒரு பகுதி நேர ஆசிரியையாகப் பணிசெய்யும் பெரும்பேறு கிடைத்ததில் மிகவும் மனநிறைவு அடைகின்றேன். தமிழ் வகுப்பில் படிக்கத் தொடங்கிய பின்னரும் சமூக வைபவங்களில் கலந்துகொள்ளத் தொடங்கிய பின்னரும் எமது பிள்ளைகளில் உள்ள மாற்றங்களை அவதானித்துப் பூரித்துப்போன பெற்றோர்களில் நானும் ஒருவர் என்று சொல்வதில் மிகவும் பெருமை கொள்கின்றேன்.

 

எமது சமூகத்தில் சமூக வைபவங்களும் தமிழ் வகுப்புக்களும் தொடர்ந்தும் சிறப்பாக நடைபெற்று புலம்பெயர் நாடுகளில் எமது மொழியும் இனமும் மென்மேலும் மேன்மைபெற எனது இதயம் நிறைந்து வாழ்த்துகின்றேன்.

 

திருமதி. தயா சிவேந்திரன்
          (தமிழ் ஆசிரியை – குவல்ப்)

Thamil Heritage School was my humble abode….


The Thamil Heritage School was my humble abode for 2 hours of my Saturdays from when I started attending high school, in 2004, till the very last week of my Grade 12 year in 2008. Throughout four years of my life, I can say that I have many memories to cherish from Thamil class. Being the oldest student in my class, I always felt the most pressure when it came to learning Thamil. I'm happy to say that I progressed through class along with my sister and our fellow classmates beneficially.


I remember as a student, we would always look forward to our break at 11am. Even though it was just for 15 minutes, we were always excited as the time got closer and closer to break. During this time, we would share our food with the other students in class, joke around, and play games. I was 17 years old when I left Thamil class, and I had gotten to know many of the young children that attended. As a 20 year old now, it's incredible to see these children all grown up. As students, we had many memories and funny instances and one of the most memorable one was when the "senior students" of the class were learning colours. For each colour, we would always associate a funny term to describe it. As soon as we hit the colour green, "pachai", all of us began to sing the song "Pachai Nirame" from the tamil movie Alaipaayuthe. It was times like these that made Thamil class memorable.

 

One of my proudest moments in my Thamil class years, was in 2005 when I was 15 years old, and we performed the Thiruvilayaadal play for TVI. This drama was a very exciting opportunity for me because I got to play an exciting role as Lord Siva. I got to dress up as the character in extremely fancy clothes, jewellery and also received a chance to wear a moustache that was glued to my face and took a very long time to come off. It was a fantastic group effort as all the cast came together to give a great performance for TVI, to the community as well as at the Nagaichuvai Maalai 2005. This was one of the most exciting opportunities the Thamil Heritage School provided me with and I’m very grateful to have taken part in it.

 

I'm happy to say that throughout my 4 years in Thamil class, I am accomplished in reading and writing Thamil (something that many people I know my age are incapable of doing).  Thamil class has taught me well, given me knowledge about our culture, our traditions and also given me the opportunities to participate in events such as the Chithirai Puthaandu events we had yearly, and the many Christmas parties. These were four years of my life, four years of incredible events and opportunities I participated in, and four years I will never forget. I wish the very best of luck to all the future students and wish them an enjoyable experience at the Thamil Heritage School as I did.


Mathangi Mayakrishnan
Bachelor of Mathematics -2013 (University of Waterloo)

நம் தமிழ் வாழ….


தமழ் பேசும் மக்களாகிய நாம் எமது நாட்டில் எமது மொழி கலை கலாச்சாரம் ஆகியவற்றின் தனித்துவத்தைப் பேணமுடியாத வேதனையுடன் புலம் பெயர்ந்தோம்.

 

 அதிர்ஷ்ட்டவசமாக தனிமனித சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் கனடாவிலேயே எம்மவருட் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றோம்.  இங்கு வந்த நாம் எமது எதிர்கால இளந்தலைமுறையினரின் தாய் மொழி வளத்தை ஆற்றலை எங்ஙனம் பேணி வளர்க்கலாம் என்று துயரப்படும்போதுதான் இப் பாடசாலை பற்றி அறியக்கிடைத்தது.

 

எமது பிள்ளைகள் இங்கு கல்வி பயிலக் கிடைத்த வாய்ப்பினைப் பேரதிர்ஷ்ட்டமாகக் கொள்கின்றோம். வேற்று மொழி பேசும்  பிள்ளைகளுடன்  தமது  கல்வியைத்  தொடரும்  பிள்ளைகள வாரத்தில்  ஒரு  நாள் இப்பாடசாலைக்கு வந்து கல்வி கற்பதில் பெருவிருப்பும் ஆர்வமும் கொண்டுள்ளனர். இதனைத் தவிரஇ இங்கு மேற்கொள்ளப்படும் எமது பாரம்பரிய கலை கலாச்சார விழாக்களஇ; போட்டிகளில் எல்லாம் பெரு விருப்புடனும் ஆர்வத்துடனும் இருப்பதைக் காணும்போது மகிழ்வடைகிறோம்.

 

 எமது இளந்தலைமுறையினருக்குக் கலங்கரை விளக்கம்போற் காணப்படும் இப்பாடசாலை மேலும் பல துறைகளிலும் வளாச்சியடைய தமிழன்னையை வேண்டிநிற்போம்.


        ….சிவகரன் - யசோ

Working together to help our community …..


We are proud to be part of the Thamil Heritage School of Waterloo region and Guelph which facilitates and provides a forum for the thamil community members of KWCG region to come together and work together for the betterment of not only our local community but also the thamil community at large. The way we see it, the main mission of the Thamil Heritage School is three-fold:  to make sure our children maintain our thamil identity by leaning Thamil Language and Culture, to support our less-fortunate thamil brothers and sisters in Sri Lanka and India with their economic and children’s educational needs, and to bring together our local community members by organizing events towards meeting their socializing needs. It goes without saying that the last of the above stated mission objectives, namely bringing our community members together, is important for achieving the other two mission objectives of the Thamil Heritage School effectively. We would like to thank all the members who have been volunteering tirelessly with their invaluable time and all the sponsors who have been helping financially for the growth and success of the Thamil Heritage School and its noble mission objectives.


Praba and Ravi Ravichandran
          (Waterloo)

மனமார வாழ்த்துகிறேன்..


பத்தாவது  ஆண்டைக் கடந்து வெற்றிகரமாக நிகழும் தமிழ் கலாச்சாரப் பாடசாலையை மனமார வாழ்த்துகிறேன். பாடசாலையின் ஆரம்பத்திலும் அதன் பல விழாக்களிலும் அதிகளவு பங்குபற்றிய எனக்கு இது பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. பாடசாலை தொடர்ந்து வெற்றிநடைபோட  வும் தமிழ் சமூகம் தன் தனித்துவத்தைக் கனடாவில் அழியாது நிலைபெறச் செய்யவும் பெற்றோரினதும் மாணவர்களினதும் தணியாத ஊக்கம் மிக அவசியம்.

 

இன்று பெருமளவில் நிகழும் தமிழ் விழாக்களும் கலை நிகழ்வுகளும் அச்சிடப்படும் புதினப் பத்திரிகைகளும்  சஞ்சிகைகளும் வளர்ந்தோரை மகிழ்விக்கவே உதவுகின்றன. தமிழ் பாடசாலைகளும்இ கலைப் பாடசாலைகளுமே  சிறுவர்களை மையமாகக்கொண்டு நிகழ்கின்றன. எமது வருங்கால தலைமுறை தமிழைப் போற்றி வளர்க்க இவையே உதவும் என் எதிர்பார்க்கலாம். எனவே தமிழ் பாடசாலையை காத்து வளர்ப்பது தமிழ் ஆவலர்களின் கடமையாகும்.

 

Rev Pope born in Britainan, Bishop Robert Caldwell born in Ireland,  Father Beschi born in France, Kamil Zvelabil a Czech and George Hart an American studied Tamil in the Universities or under a guru and  were able to translate famous Tamil books, write literary worthy poetry and   research articles through which the greatness of Tamil was exposed to the western scholars. I hope some of our children who are learning English and Tamil simultaneously will emulate the above scholars in enriching Tamil.

வாழ்த்துக்களுடன்


ம சி பிரான்சீஸ்
          (Waterloo)

வாழ்த்துகின்றேன்…

 

புலம்பெயர்ந்து தமிழர் வாழுமிடமெல்லாம் தமிழ் மொழியை வாழவைக்க வேண்டியது காலத்தின் கடமையாகும். எமது இளைய சந்ததியினர் தமிழ் பேச, தழிழை கற்க அவர்தம் பெற்றோரின் ஆக்கமும் ஊக்கமும் முக்கியமானதாகும். இவ்வகையில் வோட்டலூ வட்டார மற்றும் குவல்ப் பிரதேச தமிழர்கள் தமிழ்ப் பாடசாலையை உருவாக்கி பல சிரமங்களுக்கு மத்தியில் கடந்த பத்து வருடங்களாக நடாத்தி வருவது பாராட்டத்தக்கது.

 

2005ம் ஆண்டிலிருந்து இத்தமிழ் பாடசாலையில் கல்வி கற்பிக்க சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு நான் மகிழ்வடைகின்றேன். இப்பாடசாலை மாணவர்கள் தமிழை பேசி வாசிப்பதுடன் நின்று விடாது, பல நிகழ்ச்சிகளை அரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் வழங்கி தமது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்கள். அம்மாணவர்களுக்கும், அவர்கள் அதனை அடைவதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் அனைத்து ஆசிரியர்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன். 

 

இம்மாணவர்கள், இத்துடன் நின்று விடாது, எமது பண்பாடு, கலை, மொழி என்பவற்றை அழிந்து விடாமல் அடுத்த சந்ததிக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்பதே எனது அவாவாகும்.  இன்று பத்தாவது ஆண்டு விழாக்காணும் தமிழ்ப் பண்பாட்டுப் பாடசாலை மென்மேலும் பல்லாயிரம் ஆண்டு எம்மக்களுக்கு சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 

நன்றி


சங்கீத கலா வித்தகர்
திருமதி மஜெந்தா மகிந்தன், B. A.
         (தமிழ் ஆசிரியை – Waterloo)

என்றென்றும் வாழியவே...
 
எமது பிள்ளைகள் தமிழ் பேச, படிக்க, பாட,  வோட்டர்லூ குவல்ப் வட்டாரத்  தமிழ்க் கலாச்சாரப் பாடசாலை மேற்கொள்ளும் முயற்ச்சிகளில் நாங்களும் எம்மாலான  உதவிகளைச்  செய்யும் சந்தர்ப்பங்கள்  கிட்டியதையிட்டு பெருமையும், மிகுந்த மகிழ்ச்சியும் அடைகின்றோம்.

 

இத்துடன் தனது சேவையை மட்டுப்படுத்திக்கொள்ளாது, இப்பாடசாலை, எமது பிள்ளைகளுக்கும் சமூக அங்கத்தவர்களுக்கும்  வழங்கும் சேவைகளான "நகைசுவை மாலை", விருது வழங்கும் வைபவம், ஒன்றுகூடல், பாடசாலை பிள்ளைகளை சிறு பிரயாணத்திற்கு அழைத்து செல்வது  போன்ற நிகழ்வுகளுக்கு நாங்கள் எல்லோரும் ஒன்றிணைத்து தொடர்ந்தும் தோள்கொடுத்து  வெற்றிகரமாக முன்னேற உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றோம்.


குறிப்பாகத் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை ஒவ்வொரு வருடமும்  மிகவும் சிறப்பாக, எமது ஊர்களில்  கொண்டாடுவதுபோன்று, எல்லோரும் ஒரு குடும்பத்தின் உறவுகள்போல், கூடிநின்று பொங்கல் செய்து,  வித விதமான பலகாரங்கள் செய்து எமது பிள்ளைகளுடனும் தமிழ் உறவுகளுடனும் ஒன்றாக இருந்து  உண்டு மகிழ்வது ஒரு உன்னதமான நிகழ்வாக இருப்பது மட்டுமல்லாது, எமது ஊரின் பசுமையான நினைவுகளை மீண்டும் எம் கண்முன்னே கொண்டுவரும் ஒரு சிறப்பான நிகழ்வாகவும் அமைகின்றது.

இக்கழகமானது மென்மேலும் சிறந்து வளர நாம் எல்லாம் என்றென்றும் தோள் கொடுப்போமாக!
-நன்றி-

குணே (நிர்வாக அங்கத்தவர்), 
சுகி ( தமிழ் ஆசிரியை - Waterloo)

தமிழ் உயர நாம் உயர்வோம்…


மொழியே ஓர் இனத்தின் முதன்மையான அடையாளம். ஒரு குமுகத்தின் வளர்ச்சி அக்குமுகம் பேசும் மொழி வளர்ச்சியோடு இணைந்ததாகும். தமிழர் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பேணுவது தமிழராகிய ஒவ்வொருவரின் கடமையாகும். தமிழை எமது இளைய தமிழ் செல்வங்களுக்கு அறியவைப்பது அறிந்தோரால் ஆக வேண்டிய பணியாகும். தமிழ் மொழியை கற்பதன் மூலம் பழந்தமிழர் இலக்கியச் செல்வங்களின் செழுமையை எமது மக்கள் உணர வழி செய்வதுடன் தமிழை வளர்த்தெடுப்பதில் நாம் அனைவரும் ஆர்வம் கொண்டு உழைக்க வேண்டும். ஓவ்வொரு இளைய தமிழர்களிடமும் தேனிலும் சிறந்த இனிய இன்பத்தமிழை ஒவ்வொரு துளி நிமிடமும் தமிழில் தமிழருடன் பேசுவோம் என உறுதி கொண்டு செற்படுவோம்.


சங்ககாலத்தில் பெரு நீரோட்டமாகக் வழிந்தோடிய தமிழ் அருவியை நாம் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், எமது புனிதமான குறிக்கோள் தமிழை கட்டி எழுப்புவதாகும் என்ற நல் எண்ணத்தோடும் வோட்டர்லூ குவலப் வட்டாரம் தமிழ் கலாச்சாரப் பாடசாலை தமிழை வளர்த்தெடுக்க தமிழ் மாணவர்களுக்கு தமிழ் வகுப்புக்களை நடத்துவதுடன், பல் வேறு நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றது என்றால் அது மிகையாகாது.  

  
மொழியின் வாழ்வு அம்மக்களி;ன் வாழ்வென்றும் அம் மொழிக்கு வந்த தாழ்வு அம் மக்களின் தாழ்வென்றும் உறுதிப்பட உரைக்கும் பாவேந்தரின் கருத்தை உள்ளத்தின் ஏற்றி பல்லின பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்தாலும் தமிழ் மரபில் நின்று காலத்துக்கேற்ப புதுமை கொண்டு புலம் பெயர் இலக்கியங்கள் பல படைத்து நம் எண்ணம், செயல், எழுத்து, பேச்சு அனைத்திலும் தமிழை போற்றி தமிழராய் வாழ்வோம். அத்துடன் புலம் பெயர்ந்த நாடான கனடாவில் தமிழ் மாணவர்கள் தமிழைக் கற்பதால் அவர்களது கல்வித் துறையில் பல்கலைக்கழக அனுமதிக்கும் தமிழ் திறமைச் சித்தியானது வழி கோலுகின்றது என்றால் பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.


தமிழ் மொழிப்பற்றை இளைய தமிழ் மாணவர்களுக்கு வளர்த்தெடுக்க பெற்றோராகிய ஒவ்வொருவரும் தாய்மொழியானது வீட்டு மொழியாக அமையக்கூடிய வகையில் செயற் பட வேண்டும் தமிழனின் வாழ்வு தமிழ் மொழி மூலம் செழிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு தமிழனும் ஒன்று பட்டு உழைப்போமாக!
 

குணமலர் ஏரம்பமூர்த்தி

(தமிழ் ஆசிரியை - Waterloo)

Teaching Thamil in Waterloo Region and Guelph…..

 

It is a privilege for me to write a brief introduction about the Thamil Heritage School (THC) of Waterloo region and Guelph. This school currently runs language classes at two locations serving the Tamil community in the Cambridge, Guelph, Kitchener and Waterloo.

 

Why we have to learn Thamil


Tamils have to be proud of their language not only because they speak it but also because Tamil is one of the greatest classical literatures and traditions of the world. According to George L. Hart, Professor of Tamil, University of California, Berkley, Tamil literatures are older than other modern Indian languages by more than a thousand years and as old as Latin and older than Arabic. Tamil literature has an entirely independent tradition, with almost no influence from Sanskrit or other languages and is vast and rich. As we all know, the Tirukkural is one of the world's greatest works on ethics that explored and illuminated every aspect of human existence.

 

Spread of Thamil


I have witnessed the growth and spread of Tamil outside Asia especially in Western Europe and North America for the last 27 years ever since I have landed in France. I spent 2 years in France without speaking a word of Tamil, until I moved to Paris and started making contacts with other Tamils.  As an Eelam Tamil, I am proud to say that we (Eelam Tamils) contribute enormously to the growth and spread of Tamil in countries that are outside Asia. Within a short time, I could witness the growth of Tamil schools in Paris. If I am not wrong, the first Tamil School was established in Europe was in France.  However, within short periods, the growth and spread of the teaching of Tamil to children leaped. Now, there are many schools all over Europe, Australia, and North America that are teaching Tamil, culture, and religion as they go hand in hand.

 

Importance of speaking Thamil


Although English is the dominant language, people have strong emotional ties to their mother tongue. To keep a language alive, you have to speak and read it frequently. The value of a language is its usefulness, not just at home, but around the world. Knowing Tamil will enable us to connect with other Tamils around the world including Tamil Naadu, Tamil Eelam, and wherever other Tamils live.  Tamil is also the connecting language for Tamil who are living in non-English speaking countries.


 

Most students will have little difficulty in mastering Tamil. However, if parents speak in English to their children at home, learning Tamil will be a bit more problematic. Research of American-born Chinese disclosed that when the second-generation Chinese try to learn Chinese in college, those who speak English at home found mastering Chinese as difficult; those whose parents spoke to them in Chinese easily made the grade. Lee Kuan Yew, the senior statesman and former prime minister of Singapore said that children easily learn their mother tongue if both parents speak in their mother tongue to them. If one speaks in mother tongue and the other in English, the child will grow up speaking more English than their mother tongue.


Teaching Thamil in Waterloo Region and Guelph


Therefore, it was not an accident that Thamils in the Waterloo Region and Guelph Area started schools to teach the Tamil language and culture to their children. Establishing and running Tamil schools in this region is a challenge because the Tamil community in this region have family connections in GTA (Greater Toronto Area), most of them spend their weekends and holidays in the GTA. Therefore, they either do not have time to bring their children to the schools or can take their Children to schools in GTA. The major challenge is finding the resources to run the schools. This region has very limited sponsors who are interested in supporting Teaching Tamil.  


History of Thamil School in Waterloo Region and Guelph


 

We could divide the history of teaching Thamil in this region into 3 periods; the first Thamil school in this region was started in 1989 in Waterloo through School Board by concerned thamils with about 20 students.  After a few years of operation, due to lack of interest by the parents, the initiative went into dormant state until the year 2000.


The second period was teaching Thamil in collaboration with International Language program of Catholic School Board of Wellington County from 2001 until 2004.  However, we could not sustain it due to the lack of students required by the Board to qualify. 


 

The third period was very challenging and rewarding. Members of the Thamil community of the region, started running their own school. The first school was established in Waterloo in a rented facility on Saturdays in January, 2005 using funds collected from the community members, parents and well-wishers. Even though the fund was not enough to run the schools, the community did not give up. They started organizing fundraising events called “Nagaichchuvai Maalai” from 2005. These events were held successfully in Toronto for 4 years continuously with overwhelming support of Tamil well-wishers and business community. These events were not only brought funding to the school but also brought the community together. Unfortunately, the event was not held in 2009 and 2010 due the unfortunate event in Tamil Eelam.


The community in the region has seen great success during this period. During this period, the second school was established in Guelph in 2006. The community came together and support our brothers and sisters in Tamil Eelam during their difficult time. They initiated a program to support schools in Tamil Eelam and aid program to help those deprived of income due to the civil war. Further, this school brings the community members together through various activities such as town hall meetings, cultural events, and educational tours for children. It is also a link to other cultures and community in the region.


Our school developed the curriculum that is equivalent to the one used by Toronto District School Board (TDSB) for teaching Thamil in their International Language Program(ILP)  and published textbooks for our own students. These books were made available to other schools at cost.
 

The future of teaching Thamil in Waterloo Region and Guelph Area


In the interest and need of the growing Thamil community in the region, Thamil Heritage School will continue its activities with more drive in the future. A third Tamil School will be opened in Cambridge in September 2011 and more activities are planned for the years to come. The success of this school is mainly due the dedicated members of the community who run the Thamil Heritage School and other activities on a voluntary basis. To be more successful, every member of the Tamil Community in the region is urged to be a part of it and contribute to its success. 
  

Punithathas (Guelph)

தமிழ்ப் பாடசாலையின் தசாவதார ஆண்டு விழா..


தமிழர்கள் ஆகிய நாம் கனடா மண்ணில் தழிழை வளர்தெடுக்கும் நோக்குடன் 2001ம் ஆண்டு முதல் முதலாக குவல்வ் நகரில் தமிழ் கலாச்சார பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வோட்டர்லூ நகரிலும் தமிழ் சிறார்களின் நலம் கருதி தமிழ் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இவ்வருடம் தமிழை விரிவு படுத்துவதற்காக கிட்சினர் கேம்பிறிச் நகரிலும் புதிதாக தமிழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மிகவும் பெருமையுடன் அறியத்தருவதுடன் வோட்டலூ குவல்வ் தமிழ்க் கலாச்சாரப் பாடசாலையானது பத்தாவது ஆண்டை மிகவும் சிறப்பாக இந்த ஆண்டில் கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்.


தமிழ் பாடசாலை அமைப்பானது இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கணவர்களை இழந்த விதவைகளுக்கு சுய தொழில் செய்வதற்காக உபகரணங்களை வாங்குவதற்கு எமது அங்கத்தவர்களின் மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தை எமது தாயக உறவுகளுக்கு வழங்கி உதவிகளையும் செய்துள்ளோம். அத்துடன் வடக்கிலும் கிழக்கிலும் மிகவும் பின் தங்கிய மூன்று பாடசாலைகளைத் தெரிவு செய்து அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக பல உதவிகளை பல வருடங்களாக செய்து வருகின்றோம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.


எமது தமிழப்; பாடசாலைகளின் நோக்கமானது தமிழை வளர்த்தெடுப்பதுடன் எப்போதும் தமிழனாக வாழ்ந்து எமது இளையை குமுகத்தையும் தமிழ்ப் பற்றுள்ளவர்களாக உருவாக்குவதேயாகும். இந்த உன்னத சேவைக்கு நாம் என்றென்றும் தோள்கொடுப்போமாக!


“தமிழுக்கு அமுது என்று பெயர்”
   ரகு துரைரெட்ணம் (Cambridge)

என் அன்னைத் தமிழ் வாழ…

எனது பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய Waterloo, Kitchener, Guelph, Cambridge  வாழ் என் தமிழ் உறவுகளுக்கு….


வோட்டர்லூ குவல்ப் வட்டாரத் தமிழ்க் கலாச்சாரப் பாடசாலையானது இன்று தனது 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இப் பொன்னான வேளையில்இ இப்பாடசாலையின் ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை அதன் வளர்ச்சிப் பாதையின் அத்தனை படிகளிலும் உங்களில் ஒருவனாக நின்றவன் என்ற வகையில் பேரானந்தம் அடைகின்றேன்.


“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”; என்று மகாகவி பாரதி அன்று கனவு கண்டான். ஆனாலும் இன்று காலத்தின கட்டாயத்தினால் புலம்பெயர்ந்த தமிழர்களின்; வாழ்வில் நம் மொழியையும் கலாச்சாரத்தையும் நம்மிடையே தக்கவைப்பதும் நமது அடுத்த தலைமுறைக்கு அதைனை எடுத்துச் செல்வதும்கூட இன்று ஒரு பாரிய சவாலாக உருப்பெற்றிருக்கின்றது. அதற்கான முதன்மைக் காரணிகளாக புலம்பெயர் நாடுகளின் இயந்திரத்தனமான வாழ்க்கைமுறையும் பொருளாதாரத்தை நோக்கிய போட்டியுமே இருப்பதாக நான் கருதுகின்றேன். இவ்வாறு எமது வாழ்க்கை நகரும்போது மெல்லத் தமிழ் இனிச்சாகுமோ என்ற அச்சமும் தானாகவே எழுகின்றது.
இந்த அச்ச உணர்வின் உந்துதலினால் உருவானதுதான் எமது முதலாவது தமிழ்ப் பாடசாலை.


Guelph நகரத்தில்  International Language Program  என்ற அரசாங்கத் திட்டத்தின் உதவியுடன் தோற்றம் பெற்ற இப்பாடசாலையானதுஇ ஆசிரியர் பற்றாக்குறைஇ மாணவர் பற்றாக்குறை எனப் பல்வேறு தடைகளைச் சந்தித்தபோதும்இ அத்தனை தடைகளையும் வெற்றிகரமாகக் கடந்து 2004ம் ஆண்டுவரை தொடர்ந்தது. அதன்பின்னர் மாணவர் வருகை மிகவும் குறைவுற்ற நிலையில் அரசாங்கப் பாடசாலை நிர்வாகம் தமிழ் வகுப்பை நிறுத்த வேண்டிய நிலைக்கு ஆளானது.

 

சற்றே மனம் தளர்ந்துபோன நாம்..அதற்கான மாற்றுவழி ஒன்றைப்பற்றிச் சிந்தித்தபோதுதான் தமிழ்மீது தாளாத காதல்கொண்ட எம்முறவுகள் எமக்கென்று ஒரு பாடசாலையை உருவாக்கிஇ நம்மொழியை நம்பிள்ளைகளுக்குப் புகட்டிடத் தாமாக முன்வந்து பொருளுதவி செய்ததை இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கும். இங்கே இன்னும் ஒரு சிறப்பான விடயத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதாவது தமிழ்ப் பாடசாலைக்கு வரும் வயதில் தம் பிள்ளைகள் இல்லாத பெற்றோரும்கூட பொருளுதவி செய்தார்கள் என்பதே. இவ்வாறு எம்முறவுகளின் பேராதரவுடன் 2005ம் ஆண்டு தை மாதம் வோட்டர்லூ நகரிலும் அதனைத் தொடர்ந்து 2006ல் குவல்ப் நகரிலும் எமது தமிழர்களின் நிதியில் இயங்கும் தமிழ்ப் பாடசாலை தோற்றம் பெற்று இன்றும் சிறப்பாகத் தொடர்ந்து இயங்கி வருகின்றது.

 

2005ல் இருந்து இன்றுவரையுள்ள காலப்பகுதியின் சில காலங்களில்இ தமிழ் கற்பிக்கும் ஆசிரியைகளின் பிள்ளைகள் மட்டுமே பாடசாலைக்கு வருகைதந்த சந்தர்ப்பங்களும் உண்டு. இவ்வாறு இருந்தும் மனம் தளராது பாடசாலைக்கு வந்து கல்வி கற்பித்த ஆசிரியைகளின் அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை மனமாரப் பாராட்டுகின்றேன்.


இவ்வாறுஇ எமது வட்hரங்களில் தமிழ் மொழி கற்பிப்பதில் பல்வேறு தளர்வு நிலைகளும் எதிர்பாராத மற்றும் எதிர்பார்த்த தடங்கல்கள் எம்மவர்களின் தன்னலமற்ற தமிழார்வத்தைச் சோதனை செய்தபோதும்இ அச்சோதனைகளையெல்லாம் பாடங்களாக்கிஇ அனுபவங்களாக்கிஇ இன்று எமது “வோட்டர்லூ குவல்ப் வட்டாரத் தமிழ்க் கலாச்சாரப் பாடசாலை” தனது பதினோராவது ஆண்டில் பெருமையுடன் கால் பதிக்கும் சாதனை கண்டு நிற்கின்றது.
 
இச்சாதனையின் பின்னணியில் எதையும் தாங்கும் மன வலிமையுள்ள தூண்களாகச் செயற்பட்ட பெருந்தகைகளின் பெயர்களைப் பட்டியலிட நான் விரும்பினும் அவர்கள் விரும்பமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அப்பேற்பட்ட தன்னலமற்ற தமிழ்த் தொண்டு செய்யும் புனிதர்கள் என்றால் மிகையாகாது.

 

இவ்வாறு வளர்ச்சிகண்ட நமது பாடசாலை இவ்வாண்டு(2011) புரட்டாதி மாதம் தொடக்கம் Waterloo Catholic District School Board எனும் திட்டத்தின்கீழ் நடாத்தப்படும் பன்மொழிப் பாடசாலையுடன் இணைந்து தனது தமிழ்ச் சேவையைத் தொடர இருக்கின்றது என்ற செய்தி கண்டு என் மனம் பூரண நிறைவடைகின்றது. இத்திட்டத்தில் இணைவதனால் எமது பிள்ளைகள் தமிழ்க் கல்விக்கான சான்றிதளையும்(ஊசநனவை) பெறுவார்கள் என்பதே கூடுதல் சிறப்பாகும்.

 

மொழி என்பது ஒரு இனத்தின் முதன்மையான அடையாளம் என்பது சான்றோர்கள் கூற்று. எனவே எதிர்காலத்தில் குறிப்பாகப் புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் வாழ்வும் தாழ்வும்தான் தமிழர் என்ற ஒரு இன அடையாளத்தின் வாழ்வும் தாழ்வுமாக அமையப்போகின்றது. நம் இல்லங்களில் நம் பிள்ளைச்செல்வங்களுடன் தமிழில் உரையாடுவதே எதிர்காலத்தில் நம் மொழியையும் நம் அடையாளத்ததையும் தற்காத்துக்கொள்ளும் தலைசிறந்த வழியாகும். இதை சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் பிரதமர் பின்வருமாறு தனது ஆயனெயசin மொழி பேசம் மக்களுக்குக் கூறுகின்றார்.

 

“My advice is for both parents to speak Mandarin to their children if they can. If one speaks in Mandarin and the other in English, the child will grow up speaking more English than Mandarin” - Lee Kuan Yew, Former Prime Minister of Singapore.  இக்கூற்றானது நம் தமிழுக்கும் பொருந்தும் என்பது வெள்ளிடைமலை.

 

எனவே இப்பத்தாண்டுகளில் பல தடைகளையும் தாண்டி இன்று பரிணமிக்கும் எமது பாடசாலைஇ இன்னும் எத்தனை தடைவரினும் அத்தனையும் நம் அறிவுகொண்டு தகர்த்தெறிந்து மென்மேலும் வளரவேண்டும்இ  நாம் தமிழர் என்ற அடையாளம் காத்து தரணியில் உயரவேண்டும். அதற்காய் நம் அடுத்த தலைமுறை பொறுப்பேற்று மொழிகாக்க முன்வரவேண்டும் என்று என் உயிரினும் மேலான என் அன்னைத் தமிழ்மீதும் அவள்தம்; பிள்ளைகளாம் என் தமிழ் உறவுகள்மீதும் கொண்ட அழியாத காதலால் வேண்டி விடைபெறுகின்றேன்.

 

“அன்னைத் தமிழுக்கோர் இன்னல் விளைந்தால் - அது
என்னைப் பெற்றவள் இன்னலாய் எழுவேன்”


      என்றென்றும் அன்புடன்
     குணா குணசேகரன் (நிர்வாக அங்கத்தவர்)